சஷ்டி விரதம்: கடன் தொல்லை நீங்க, முருகன் அருள் கிடைக்க

பதிவேற்றம் செய்த நாள் November 27, 2021   |   ஆசிரியர் மயில்ராஜ்

0 கருத்துக்கள்

சஷ்டி விரதம்!…

சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது தான் பழமொழியாகும் (சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது தவறானது).

அதாவது, இந்த விரதம் இருந்தால் திருமணம் முடிந்த பெண்களின் அகப்பையாகிய கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருளாகும்.

குழந்தை வரம் இல்லாத பெண்களுக்கு மிக சிறந்த விரதம் சஷ்டி விரதம் ஆகும். இந்த சஷ்டி திதியில் விரதம் இருந்து வந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம்.

சஷ்டி விரதம்: கடன் தொல்லை நீங்க

16 பேறுகளில் ஒன்றாக கருதப்படும் குழந்தைப்பேறு உட்பட அனைத்து பேறுகளையும் அளிக்கும் வல்லமை உடையது தான் சஷ்டி விரதம்.

இந்த விரதத்தின் மூலம் அனைத்து விதமான பலன்களை பெறலாம். இந்த விரதம் மிக முக்கியமானது.

சஷ்டி விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி?

எல்லா மாதமும் சுக்கில பட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி  6 நாட்கள் சஷ்டி விரதம் தொடர்ந்து இருக்க வேண்டும்.

தினமும் அதிகாலை எழுந்தவுடன், குளித்து மனம் உருகி முருகனை வணங்கிட வேண்டும்.

பெரிய கும்பம் உள்ளவர்கள் தண்ணீர் நிரப்பி மாவிலைகளை வைத்தும், சந்தனமும், அட்சதையும் தருப்பையை வரிசையாக வைத்தும் முருகனை அதில் ஆலகாரம் செய்வதும் மலரிட்டு தீபம் காட்டி வந்தால் இந்த வழிபாடுகள் மிகவும் நல்லது.

கடைபிடிக்கும் முறை:

இந்த சஷ்டி விரத நாட்களில் பகலில் உறங்குதல் கூடாது.

இந்த சஷ்டி விரதத் தினத்தன்று இரவிலும் கண் விழித்து இருப்பது மிக மிக கூடுதல் பலன்களை தருகின்றது.

முருகனை ஆறு காலமும் பூஜை செய்து  வந்தால், கடன் தொல்லையில் இருந்து நீங்களாம்.

கடன் தொல்லையை நீங்குவதற்கு மற்றும் பணம் சேர இந்த 6 நாட்களில் கந்தனின் சரித்திரங்களையும், சிறப்புகளையும், திருவிளையாடல்களையும், முருகன் செய்த அற்புதங்களையும் கேட்டு வேண்டும்.

திருப்புகழ் பாராயணம் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு திருப்புகழ் பாராயணம் செய்கிறோமோ அந்த அளவுக்கு முருகனை நெருங்கலாம்.

முருகனை மனதில் நிலை நிறுத்தி நேரம் தவிர விடாமல் கூடுதல் நேரம் கிடைத்தாலும் அந்த சமயத்தை வீணாக்காமல் முருகனை நினைத்து தியானம், பிரார்த்தனை, பாராயணம் செய்யலாம்..

இந்த விரதங்களை ஒவ்வொரு மாதமும் சஷ்டி விரத சமயத்தில் கடைப்பிடிக்கலாம்.

சஷ்டி விரத பலன்கள் :

1.) இந்த சஷ்டி விரதங்கள் இருப்பவர்களது வினைகள் எல்லாம் தீர்ந்து விடும்.

2.) அதனால் விரதத்தை கடைபிடிக்க, பக்தர்களுக்கு எண்ணிய நலனையும், புண்ணிய பலன்களும் கிடைக்கும்.

3.) இந்த சஷ்டி விரத வழிபாடு செய்து வந்தால், முருகனிடம் வேண்டியதை கேட்டதை பெறலாம்.

4.) இந்த சஷ்டி விரதகள் எல்லா ஐஸ்வர்யத்தையும் தரக்கூடியது.

5.) சஷ்டி திதியில் விரதம் இருந்து வந்தால் விரும்பிய அனைத்தையும் பெற்று கொள்ளலாம்.

6.) இந்த சஷ்டி விரததால் குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது மிகவும் நன்று.

7.) 16 பேறுகளில் ஒன்றாகவே கருதப்படுவது குழந்தைப் பேறுகளாகும். அதனால் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் சஷ்டி விரதத்தை மேற்கொள்ளலாம்.

0Shares

கட்டுரை ஆசிரியர்: மயில்ராஜ்

Hey, I am Myilraj G, from Tamil-Nadu India. The decision I made on 31-DEC-2015, has entirely changed my life from a novice office going guy into a successful entrepreneur. Blogging was my passion and life becomes enjoyable. Get here to know more about me.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: சஷ்டி விரதம்: கடன் தொல்லை நீங்க, முருகன் அருள் கிடைக்க

Leave a ReplyYour email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares