காலக்கணக்கீடு | ஜோதிட சாஸ்திரம் பாகம் 04

பதிவேற்றம் செய்த நாள் October 11, 2023   |   ஆசிரியர் திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

0 கருத்துக்கள்

கால அளவில் மிகப்பெரியது யுகங்கள் ஆகும். மிகச்சிறியது அல்பமாகும். யுகங்கள் என்பது மொத்தம் நான்கு.

  1. கிருதயுகம், திருதயுகம், கிரேதாயுகம்: இது மூன்றும் ஒரே பொருள்தான். இதன் கால அளவு 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகளாகும்.
  2. திரேதாயுகம்: இதன் கால அளவு 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகளாகும்.
  3. துவாபர யுகம்: இதன் கால அளவு 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகளாகும்.
  4. கலியுகம்: இதன் கால அளவு 4 லட்சத்து 36 ஆயிரம் ஆண்டுகளாகும்.

மேற்காணும் கால கணக்கீடு ஆனது, பூலோகம் எனும் இந்த பூமியில் வசிக்கும் நம்முடைய 1 நாள் என்பது தேவர்களின் ஒரு சுவாசம் எனும் மூச்சாகும். இவ்வாறு விடும் 21600 மூச்சுக்கள் தேவர்களுக்கு ஒரு தினமாகும். அதாவது நம்முடைய 21600 நாட்கள் தேவர்களின் ஒரு நாளாகும்.

காலக்கணக்கீடு முறை

இந்த 21600 ஐ 80 ஆல் பெருக்கினால் வரும் தொகையான (21600 x 80 = 17,28,000) 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் என்பது கிருத (அ) கிரேதயுகமாகும்.

இந்த 21600 ஐ 60 ஆல் பெருக்க வரும் தொகையான (21600 x 60 = 12,96,000) 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள் திரேதாயுகமாகும்.

இந்த 21600 ஐ 40 ஆல் பெருக்க வரும் தொகையான (21600 x 40 = 8,64, 000) 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள் துவாபரயுகமாகும்.

இந்த 21600 ஐ 20 ஆல் பெருக்க வரும் தொகையான (21600 x 20 = 4,32,000) 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் கலியுகமாகும்.

மானுட வருடம் மற்றும் தேவ வருடங்களை இணைத்து யுக வருடங்களை நமது முன்னோர்கள் கணக்கீடு அளித்துள்ளார்கள்.

கலியுகம் கி.மு 3,101ல் ஆரம்பித்தது என்றும், அப்போதுதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மண்ணுலகை நீக்கிப்போனார் என்பதும் புராணங்களில் உள்ள செய்திகள்.

வேதகால நேர கணக்கீடு:

4 நொடிகள் = 1 அசு

6 அசுக்கள் = 1 பலம்

4 பலம் = 1 விநாடிகை

60 விநாடிகள் = 1 நாழிகை

60 நாழிகைகள் = 1 நாள்

1 நாழிகை = 24 நிமிடங்கள்

1 நாள் = 24 மணி நேரங்கள்

15 நாள் = 1 பட்சம்

2 பட்சம் = 1 மாதம்

2 மாதங்கள் = 1 ருது

3 ருது = 1 அயனம்

2 அயனம் = 1 வருடம்

6 மாதங்கள் = 1 அயனம்

12 மாதங்கள் = 1 வருடம்

புராண கால கணக்கீடு

பிரம்ம வருடம் தேவ்ய (அ) திவ்ய வருடம்.

வருடம் வரை வேத காலம் போலவே வைத்துக்கொள்ளவும்.

360 வருடங்கள் = 1 தேவ வருடம்

12,000 தேவ வருடங்கள் = 1 சதுர்யுகம்

71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்திரம்

14 மன்வந்திரம் = பிரம்மாவின் ஒரு பகல்

28 மன்வந்திரம் = பிரம்மாவின் ஒரு நாள்

365 பிரம்ம நாட்கள் = 1 பிரம்ம வருடம்

100 பிரம்ம வருடம் = பிரம்மாவின் ஆயுள்.

மானவ வருடம்:

மனு என்பவர் ஏற்படுத்திய வருடம் மானவ வருடமாகும். இது மன்வந்திரம் என்று சொல்லப்படும். மன்வந்திரம் என்பது மனு இந்த உலகை ஆளும் காலம் என்று அர்த்தம்.

மனு தர்ம சாஸ்திரம் இயற்றியவர் தான் மனு என்று கூறப்படுகிறது.

இந்த மனுவின் வழி வந்தவர்கள் மன்வாதி என்று குறிப்பிடப்படுகிறது.

மொத்தம் 14 மனுக்கள் அவர்களின் வருடம் தான்.

1. மானவ வருடம்
2. பெளச்ய மனு
3. சாஷுச மனு
4. ருத்ரசாவர்ணி மனு
5. அக்னி சாவர்னி மனு
6. தாமஸ மனு
7. சூர்ய ஸாவர்ணி மனு
8. ஸ்வாரேசிஷ மனு
9. ஸ்வாயம்புவ மனு
10. இந்திரஸாவர்ணி மனு
11. சைவத் மனு
12. வைவஸ்தம் மனு
13. பிரம்மஸாவர்ணி மனு
14. உத்தம மனு

மொத்தம் உள்ள மனுக்களில் தற்போது நடைபெறுவது ஏழாவது மனுவின் ஆட்சி பிரம்மாவின் ஆயுள் நிறைவடையும் போது பிரளயம் ஏற்பட்டு இவ்வுலகம் அழியும் என்று புராணங்களில் கூறப்படுகிறது.

பித்ரு (அ) பைத்திர வருடம்

பித்ருக்கள் எனப்படுவது காலமாகிப்போன முன்னோர்களாகும். இறந்த பிறகு புண்ணியம் செய்த புண்ணிய ஆத்மாக்கள் பித்ரு லோகத்தில் வாசம் செய்கின்றனர் என்று கூறப்படுகிறது.

இங்கு வாசம் செய்யும் இவர்களின் வருடமே பைத்திர வருடமாகும். இவர்களுக்கு நம்முடைய சந்திரமாதமான கணக்குப்படி;

  • 30 நாளில் பூர்வ பட்சம் எனும் வளர்பிறை 15 நாளும் ஒரு பகலாகவும்,
  • கிருஷ்ணபட்சம் எனும் தேய்பிறை 15 நாளும் ஒரு இரவாகவும்

அமையும் என்று கூறப்படுகிறது.

பாண்டவ வருடம்

மகாபாரதம் நடந்த காலத்தில் பாண்டவர்களின் வனவாசம் தொடங்கியதிலிருந்து பாண்டவ வருடம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

0Shares

கட்டுரை ஆசிரியர்: திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றுதலால், ஜோதிடம் பயின்று இன்று பலருக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறார். மேலும் நமது வளைத்ததின் ஜோதிட ஆசிரியராகவும் உள்ளார்.
இவரின் முகநூல் பக்கம் பார்க்க.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: காலக்கணக்கீடு | ஜோதிட சாஸ்திரம் பாகம் 04

Leave a ReplyYour email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares