அருள்மிகு ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்மன் – திருக்கருக்காவூர், தஞ்சை

பதிவேற்றம் செய்த நாள் March 11, 2022   |   ஆசிரியர் தேவி பெரியநாயகி

0 கருத்துக்கள்

தல சிறப்பு

ஓம் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவனநாதர் திருக்கோயில்

நமது வலைத்தல பக்கத்தில் இன்று அருள்மிகு ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலை பற்றி பாப்போம். இத்திருக்கோவில் தஞ்சை நகரிலிருந்து 20 km தொலைவில் திருக்கருக்காவூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. பாபநாசத்தில் இருந்து தெற்கே சுமார் 6 km அல்லது கும்பகோணத்திலிருந்து தென்மேற்கு திசையில் 20 km தொலைவில் உள்ளது. மேலும் அப்பர், சுந்தரர், மற்றும் சம்பந்தர் என்ற முப்பெரும் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலம்.

ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்மன் - திருக்கருக்காவூர், தஞ்சை

பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய, சோழ நாட்டு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் வெட்டாற்றின் தென் கரையில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும். திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

கரு+கா+ஊர்

கரு- தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கரு
கா- காத்த (காக்கின்ற)
ஊர்- ஊர்

கருகாவூர் என்று அழைக்கப்படுகிறது.

இங்கு ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்மன் குழந்தை வரம் வேண்டி வருவோர்க்கு குழந்தை வரம் அருள்கிறார். மூலவர் ஸ்ரீ முல்லைவனநாதர் வேண்டுவோர்க்கு அணைத்து செல்வநலன்களையும் அருள்கிறார். தமிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும், இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது.

தல வரலாறு

முன்னோரு காலத்தில் வாழ்ந்த கௌதம முனிவர் மற்றும் கார்கேய முனிவர் இங்கு தவம் புரிந்துவந்தனர். இத்தலம் முல்லை பூக்களால் நிறைந்திருந்தால் இது முல்லைவனம் என்று அழைக்கப்பெற்றது. நித்ருவா, வேதிகை என்ற தம்பதியர் இந்த முனிவர்களுக்கு பணிவிடை செய்து வந்தார்கள். ஒரு நாள் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று முனிவர்களிடம் முறையிட்டனர். அம்முனிவர்கள் இவர்களை ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்மனை வழிபட உபதேசித்தார்கள். அவர்களின் அன்பை ஏற்று கொண்ட அம்மன் அவர்களுக்கு குழந்தை வரம் அருளினார்.

வேதிகை தனது இறுதி பேறுகாலத்தில் இருந்தபோது ஒரு நாள் அவள் கணவர் வெளியில் சென்றிருந்தார். அப்பொழுது ஊர்த்தவ மகரிஷி முனிவர் இவர்களின் குடிலுக்கு யாசகம் கேட்டு வந்தார். பிரசவ வலியால் சுயநினைவு இன்றி மயங்கி இருந்த வேதிகையின் நிலை அறியாமல் ஊர்த்தவ மகரிஷி முனிவர் சாபம் கொடுத்தார். இதனால் வேதிகையின் கரு சிதைந்து கீழே இறங்கியது. சுயநினைவு வந்த வேதிகை தனக்கு நேர்ந்த நிலையை எண்ணி கர்ப்பரட்சாம்பிகை அம்மனிடம் முறையிட்டாள்.

அம்மன் அவள் முன் தோன்றி அவளது கருவை ஒரு பானையில் வைத்து காத்துவந்தார். அந்த கரு ஒரு ஆண் குழந்தையாக பிறந்தது. அந்த குழந்தையை அம்மன் வேதிகையிடம் கொடுத்தார். பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ‘நைத்துருவன்’ என்று பெயரிட்டனர். எல்லாம் வல்ல தேவியின் இந்த மகத்தான கருணைச் செயலால் மனமகிழ்ந்த வேதிகையின் வேண்டுகோளுக்கிணங்க தேவி இத்தலத்தில், ‘கருவைக் காப்பாற்றுபவள்’ என்று பொருள்படும் ‘கர்ப்பரட்சாம்பிகை’ என்ற பெயரில் இங்கே இருக்கிறாள்.

இந்தப் புகழின் காரணமாக இந்தத் தலத்துக்கு ‘திருக்கருகாவூர்’ அதாவது கர்ப்பப்பை காக்கும் தலம் என்றும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தரும் தலம் என்றும் பெயர் பெற்றது. இன்றும் குழந்தை வரம் வேண்டி வருவோர்க்கு வரம் அருளுகிறார்.

குழந்தை வரம் வேண்டி செய்யப்படும் பூஜை

குழந்தை வரம் வேண்டி வருவோர்கள் இங்கு வந்து 11 நெய் விளக்கு ஏற்றி, அம்மனின் படி மெழுகி குழந்தை வரம் வேண்டி ப்ரார்திக்கவேண்டும். கோவிலின் உள்ளே சென்றதும் நிர்வாக அலுவகத்தில் உங்கள் பெயர் சொல்லி நெய் வாங்கிக்கொள்ளவும். பின்பு நேரே உள்ள முல்லைவனநாதரிடம் சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வெளியே வந்து இடது புறம் செல்லவும். அங்கு எல்லாம் வல்ல தேவி கர்ப்பரட்சாம்பிகை அம்மன் ஆலயம் உள்ளது. அம்மனிடம் வைத்து தரும் நெய்யை வீட்டிற்கு சென்றதும் 1/2 kg சுத்தமான பசு நெய் வாங்கி இதனுடன் சேர்த்து தினமும் இரவு படுக்கைக்கு முன்பு 48 நாட்கள் சாப்பிட வேண்டும். தரிசனம் முடித்து வரும் பொழுது நிர்வாக அலுவலகத்தில் அம்மனின் படம் (Rs 30) ஒன்றை வாங்கிச்செல்லுங்கள். வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபட அம்மனின் அருள் விரைவில் கிடைக்கும். பெண்கள் மாதவிடாய் காலங்கள் மற்றும் தவிர்க்க வேண்டும். ஆண்கள் எப்போதும் எடுத்து கொள்ளலாம், இடைவேளை கூடாது.

48 நாட்களும் இந்த மந்திரத்தை உச்சாடனம் செய்து நெய் சாப்பிட வேண்டும்.

TAMIL

ஓம் தேவேந்திராணி நமோஸ்துப்யம்
தேவேந்திர பிரிய பாமினி
விவாஹா பாக்கியம் ஆரோக்கியம்
புத்திர லாபம் சதேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி
சௌபாக்கியம் தேஹிமே சுப்ஹி
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கர்பரக்ஷகே
காத்யாயினி மஹாமாயே
மஹா யோகின்ய திச்வரி
நந்தகோப சீதம் தேவம்
பதிம் மேகுருதே நமஹா!

ENGLISH

Om Devendhirani Namasdubhyam,
Devendhira Priya Bamini,
Vivaha Bhaghyam , Aroghyam,
Puthra Labam sa thehimey,
Bathim Dhehi ,Sudham Dhehi,
Soubaghyam Dhehimey, Subey,
Sowmangalyam, Subham Gnanam,
Dheimey Karbarakshake,
Kathyayini mahaa maaye,
Mahaa Yoghinya Dheeswari,
Nandhagopa Sudham Dhevam
Pathim MeyGurudhey Nama.

Garbarakshambigai Temple Pooja Detail Slip

ஆமணக்கு எண்ணெய் பிரசாதம்

பிரசவ காலத்தின் மூன்றாம் பகுதியில் இந்த கோவிலுக்கு வந்து ஆமணக்கு எண்ணெய் பிரசாதம் வாங்கி செல்ல வேண்டும். பெண்ணின் கணவரோ அல்லது குடும்பத்தில் ஒருவரோ வந்து வாங்கி செல்லலாம். ஆமணக்கு எண்ணெய்யை வலி ஏற்படும் காலங்களில் அடி வயிறு பகுதியில் தேய்க்கலலாம்.

இக்கோயிலில் கீழ்க்கண்ட பூஜைகள் நடைபெறுகின்றன:

 1. நெய் பிரசாத பூஜை. (கருத்தரிப்பதற்கு)
 2. ஆமணக்கு எண்ணெய் பிரசாத பூஜை. (பாதுகாப்பான பிரசவத்திற்கு)
 3. புனுகு சாத்தம் பூஜை.( சிறந்த ஆரோக்கியத்திற்காக )
 4. அபிஷேகம்.
 5. அன்னதானம்.
 6. கட்டளை அர்ச்சனை.
 7. நவ கோடி நெய் தீபம் (ஒன்பது கோடி நெய் விளக்குகள்)
 8. சந்தன காப்பு.(சந்தன பேஸ்ட் பிரசாதம்)
 9. தங்க தொட்டில்
 10. துலாபாரம்
 11. காது சலிப்பு மற்றும் தலை வலி.

கர்ப்பரட்சாம்பிகை காயத்ரி மந்திரம்

TAMIL

ஓம் கர்பரக்ஷாம்பிகாயை ச வித்மஹே

மங்கள தேவதாயை ச தீமஹி

தந்நோ தேவி ப்ரசோதயாத் ||

ENGLISH

Om Garbarakshambigaayai cha vidhmahe

Mangala dhevadhaayai cha dheemahee

Dhanno devi prachodhayaath ||

Garbarakshambigai Temple Entrance
Garbarakshambigai Temple Look

கோவில் அமைவிடம்

இத்திருக்கோவில் தஞ்சை நகரிலிருந்து 20 km தொலைவில் திருக்கருக்காவூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. பாபநாசத்தில் இருந்து சுமார் 6 km கிழக்கே, கும்பகோணத்திலிருந்து 20 km தென்கிழக்கு திசையில் உள்ளது

தஞ்சாவூரிலிருந்து பேருந்து உள்ளது (எண்: 24, 34, 16, 44).
கும்பகோணத்திலிருந்து பேருந்து எண் 11, 29.
பாபநாசனத்திலிருந்து 30 நிமிடத்திற்கு ஒரு பேருந்து உள்ளது.

கூகிள் மேப் வரைபடம்

Garbarakshambigai Temple Google Map Location

Click here to view Google Map Location.

0Shares

கட்டுரை ஆசிரியர்: தேவி பெரியநாயகி

தேவி பெரியநாயகி அவர்கள் இந்த வலைதளத்தின் முதன்மை ஆசிரியர்களில் ஒருவர். இவர் தற்போது தமிழக கோவில்கள் பற்றி நேரில் சென்று ஆராய்ந்து, உண்மை தன்மை அறிந்து இந்த கட்டுரைகள் எழுதுகிறார். மேலும் இவர் பற்றி தெரிந்து கொள்ள இவரது முகநூல் பக்கத்தை தொடரவும்.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: அருள்மிகு ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்மன் – திருக்கருக்காவூர், தஞ்சை

Leave a ReplyYour email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares