இழந்த செல்வத்தை பெறுவதற்காக பரிகாரங்கள்!

பதிவேற்றம் செய்த நாள் November 27, 2021   |   ஆசிரியர் மயில்ராஜ்

0 கருத்துக்கள்

நாம் இழந்த செல்வத்தை பெறுவதற்காக பரிகாரம்:

நாம் அள்ள அள்ள குறையாமல் செல்வத்தை சேகரித்து வைத்தாலும், ஒரு சில நேரத்தில் அனைத்தையும் இழந்து விடுகிறோம்.

நாம் இழந்ததை மீட்க முடியாது என எண்ணி அதைவிட்டு விடுகிறோம். ஆனால் இழந்த செல்வத்தை மீட்க ஒரே வழி இறைவனை பூஜிப்பது மட்டுமே.

இறைவனை மனமுருகி வணங்கினால் இறைவன் இரட்டிப்பாக நமக்கு தருவான்.

இழந்த செல்வத்தை பெறுவதற்காக பரிகாரங்கள்

செல்வத்தை பெறுவதற்கான பரிகாரங்கள் :

வாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண்கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனமார வேண்டினால் இழந்த புகழ், செல்வம் அனைத்தும் கிடைக்கும்.

தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபாடு செய்தால் இழந்த செல்வத்தை பெற முடியும். நமக்கு செல்வ வளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழ வைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.

திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. குபேரனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கினார்.

தேவி லட்சுமியை வணங்கியதால் இழந்ததை பெற்றார். ஆகவே லட்சுமியை வணங்கினால் இழந்த செல்வத்தை பெறலாம். வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம்.

மேலும் படிக்க: சொந்த வீடு வாங்கும் யோகம் உங்களுக்கு உண்டா?

பைரவரின் சன்னதி முன்னால் 27 மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

குபேர மந்திரம் :

ஓம் யக்ஷய குபேராய
வைஸ்ரவணாய
தநதா நியாதி பதயே
தந்தாந்ய ஸம்ருத்திம்மே
தேவி தாபய ஸ்வாஹி

என்ற குபேரனின் மந்திரத்தை தியானித்து வழிபட வேண்டும்.

தினமும் நம் வீட்டில் இறைவனை வணங்கும் போது இந்த மந்திரத்தை சொல்லி வழிப்பட்டால் இழந்த செல்வத்தை பெறலாம்.

0Shares

கட்டுரை ஆசிரியர்: மயில்ராஜ்

Hey, I am Myilraj G, from Tamil-Nadu India. The decision I made on 31-DEC-2015, has entirely changed my life from a novice office going guy into a successful entrepreneur. Blogging was my passion and life becomes enjoyable. Get here to know more about me.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: இழந்த செல்வத்தை பெறுவதற்காக பரிகாரங்கள்!

Leave a Reply



Your email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares