திருமணத்தில் தசா நிலையம் நட்சத்திர பொருத்தமும் | திருமணமும் பொருத்தமும்

பதிவேற்றம் செய்த நாள் August 28, 2022   |   ஆசிரியர் திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

0 கருத்துக்கள்

பகுதி – 9

தசவித பொருத்தங்கள் நட்சத்திர அடிப்படையில் பார்க்கும்போது, பத்து பொருத்தங்களும் மிக சிறப்பாக அமைய வேண்டும், அப்பொழுதுதான் மகனுக்கோ மகளுக்கோ மணவாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதல்ல.

ஆகவே ஜோதிடம் என்பது அனுமானம் கிரக நிலைகள் மிக தெளிவாக ஆய்வு செய்து அனுபவரீதியாக திடமாக எடுத்து சொல்லும் ஜோதிடர்கள் தவறான அனுமானத்திற்கு துணை போககூடாது.

நட்சத்திர பொருத்தங்கள் இருவருக்குமே சிறப்பாக அமையும் போது, நடப்பு தசா நிலைகள் சிறப்பாக அமைந்து வருவதில்லை.

நட்சத்திர பொருத்தங்கள் குறைவாக உள்ள ஜாதகங்களுக்கு நடப்பு தசா மற்றும் வருங்கால தசாக்கள் நன்கு அமைந்து வருகின்றன.

ஒரு ஜாதகர் பிறந்த நட்சத்திரம் எது என்று அறிந்து திருமண வயதில் அவருக்கு நடைபெறும் தசாவை கவனித்தோமானால் அது சாதகமான தசாவா அல்லது பாதகமான தசாவா என்று அறியலாம்.

உதாரணமாக திருமண காலத்தில்

அஸ்வினி நட்சத்திரத்திற்கு: சுக்கிரன் அல்லது சூரியன் தசா

பரணிக்கு: சூரியன் அல்லது சந்திரன் தசா

கார்த்திகைக்கு: செவ்வாய் அல்லது ராகு தசா

ரோகிணிக்கு: ராகு தசா

மிருகசீரிஷம்: ராகு அல்லது குரு தசா

திருவாதிரை: குரு அல்லது சனி தசா

புனர்பூசம்: சனி அல்லது புதன் தசா

பூசம்: புதன் அல்லது கேது தசா

ஆயில்யம்: கேது அல்லது சுக்கிரன் தசா

மகம்: சுக்கிரன் அல்லது சூரியன் தசா

பூரம்: சூரியன் அல்லது சந்திரன் தசா

உத்திரம்: செவ்வாய் அல்லது ராகு தசா

அஸ்தம்: ராகு தசா

சித்திரை: ராகு அல்லது குரு தசா

சுவாதி: குரு அல்லது சனி தசா

விசாகம்: சனி அல்லது புதன் தசா

அனுஷம்: புதன் அல்லது கேது தசா

கேட்டை: கேது அல்லது சுக்கிரன் தசா

மூலம்: சுக்கிரன், சூரியன் அல்லது சந்திரன் தசா

பூராடம்: சூரியன் அல்லது சந்திரன் தசா

உத்திராடம்: செவ்வாய் அல்லது ராகு தசா

திருவோணம்: ராகு தசா

அவிட்டம்: ராகு அல்லது குரு தசா

சதயம்: குரு அல்லது சனி தசா

பூரட்டாதி: சனி அல்லது புதன் தசா

உத்திரட்டாதி: புதன் அல்லது கேது தசா

ரேவதி: சுக்கிரன் தசா

மேற்காணும் 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த தசா தான் திருமண வயது காலத்தில் நடைபெறும் என்பதாகும்.

திருமண தசா சந்திப்பு, நட்சத்திரம்

மேற்கண்டவைகளில் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு நட்சத்திரங்களுக்கு திருமண காலத்தில்

சூரியன்

செவ்வாய்

ராகு

கேது

சனி

எனும் தசாக்கள் அனுகூலமிக்கதாக அமைவதில்லை என்பதாகும்.

இது இறைவனின் சூட்சுமம், அதேபோல் நாம் விரும்பும் நட்சத்திர தசவித பொருத்தங்களில் முழுவதும் சரியாக அமையுமா எனில் தினப்பொருத்தம் இருந்தால் மகேந்திர பொருத்தம் பெரும்பான்மையாக இருப்பதில்லை.

ஒன்பது பொருத்தம் தான் பார்க்க வேண்டிய நிலை ஆகிறது.

பெண்ணின் நட்சத்திரங்களில்,

கார்த்திகை

ஆயில்யம்

மகம்

சித்திரை

விசாகம்

கேட்டை

மூலம்

அவிட்டம்

சதயம்

பெண்ணினுடைய நட்சத்திரமாக இந்த ஒன்பது நட்சத்திரங்களுமாக அமைந்தால், மீதமுள்ள (18) பதினெட்டு ஆண் நட்சத்திரங்களுக்கும் கணப்பொருத்தம் சிறப்பாக அமையாது.

கணப்பொருத்தம் அமையும்போது யோனிப் பொருத்தம் மற்றும் ராசிப் பொருத்தம் சிறப்பாக அமையாது.

மேலும் ராசிப்பொருத்தம் எடுத்துக் கொண்டால் ஏழரை சனியின் பாதிப்பு வருகிறது.

ரஜ்ஜு கயிறு எனும் மாங்கல்ய பொருத்தம் நன்றாக அமைந்தால் வேதைப் பொருத்தம் கண்டிப்பாக இருக்கும்.

பொருத்தங்களுக்கும் குறைநிறைகள் சொல்லிக்கொண்டே போகலாம்.

பொருத்தங்களான பஞ்ச பொருத்தங்களில்

தினம்

கணம்

யோனி

ராசி

ரஜ்ஜு

இவைகளில் ரஜ்ஜு பொருத்தம் தவிர மற்ற பொருத்தங்களில் ஒன்று இரண்டு குறைவாக இருந்தாலும் குடும்ப பிண்ணனி நன்கு தெரிந்து, மணப்பொருத்தம், தகுதி நிலை ஒத்து வந்தால் இணைக்கலாம்.

திருமண தசவித பொருத்தங்கள்

  1. தினப் பொருத்தம்: ஆயுள் ஆரோக்கியம் பற்றி அறிய.
  2. கணப் பொருத்தம்: குணங்களை அறிந்து கொள்ள.
  3. யோனிப் பொருத்தம்: தாம்பத்ய உறவு சுகம் முறைகள்
  4. ராசிப் பொருத்தம்: புத்திர விருத்தியை அறிய
  5. ரஜ்ஜு பொருத்தம்: மாங்கல்ய பலத்தை குறிக்கும்
  6. வசியப் பொருத்தம்: விட்டுக் கொடுத்தல் – புரிந்துணர்வு
  7. ஸ்திரி தீர்க்கம்: செல்வ செழிப்பு வசதி வாய்ப்பு
  8. இராசி அதிபதி பொருத்தம்: சகல சம்பத்தை குறிக்கும்
  9. மகேந்திர பொருத்தம்: உறவுமுறை, எதிர்கால புத்திரர் நிலை அறிய
  10. வேதைப் பொருத்தம்: ஆண் பெண் கருத்து வேறுபாடுகளை குறிக்கும்.

மேற்காணும் முக்கிய பொருத்தங்கள் தசவித பொருத்தங்கள் ஆகும்.

இந்த பத்து பொருத்தங்களில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு முக்கியமானவை. இவற்றில் ரஜ்ஜு பொருத்தமே மிகமுக்கியம்.

பொருத்தங்களில் குறைந்த பட்சம் ஐந்து பொருத்தமாவது இருக்க வேண்டும்.

பெற்றோர்களின் கவனத்திற்கு,

என்றைக்கும் ஒன்று அல்லது இரண்டு ஜாதகங்களுக்கு மேல் ஜோதிடரிடம் கொண்டு செல்லாதீர்கள். சரியான பலன்களை யூகிப்பது கடினம், தவறுகள் சேர்வதற்கு நீங்களே வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக அமையும்.

திருமண பொருத்தத்தில் முதலில் காண்பது தினப் பொருத்தமாகும். இனி பொருத்தம் பார்க்க செல்வோமா?

திருமண பொருத்தம் பார்த்தல் என்பது பிறந்த நட்சத்திரப்படி பெயர் வைத்தவர்களுக்குப் பார்ப்பது. நட்சத்திரப்படி பெயர் வைக்காதபோது இப்பொருத்தம் சரியாக அமையாது.

அதாவது சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல. வேண்டுமானால் நட்சத்திரப்படி சூட்டப்படாத பெயர்களுக்குப் பொருத்தம் பார்ப்பதை எடுத்துக் கொள்ளலாம். அதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே முறையாகப் பொருத்தம் பார்ப்பதற்கு ஆண் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தையும், பிறந்த ராசியையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

0Shares

கட்டுரை ஆசிரியர்: திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றுதலால், ஜோதிடம் பயின்று இன்று பலருக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறார். மேலும் நமது வளைத்ததின் ஜோதிட ஆசிரியராகவும் உள்ளார்.
இவரின் முகநூல் பக்கம் பார்க்க.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: திருமணத்தில் தசா நிலையம் நட்சத்திர பொருத்தமும் | திருமணமும் பொருத்தமும்

Leave a ReplyYour email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares