தினப் பொருத்தம் பார்க்கும் முறை | திருமணமும் பொருத்தமும்

பதிவேற்றம் செய்த நாள் October 10, 2023   |   ஆசிரியர் திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

0 கருத்துக்கள்

பகுதி – 10

பார்க்கும் முறை ஒன்று!

பெண்ணின் பிறந்த நட்சத்திரம் முதல், அதாவது பெண்ணின் நட்சத்திரத்தையும் ஒன்று என சேர்த்து எண்ணவேண்டும். அதை தொடர்ந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணிக் கண்ட தொகையை 9 இல் வகுத்த மீதி 2,4,6,8,0 வருமானால் நட்சத்திரப் பொருத்தமாகிய தினப் பொருத்தம் உண்டு.

பார்க்கும் முறை இரண்டு!

பெண் நட்சத்திரம் முதல் ஆணினுடைய நட்சத்திரம் வரையில் எண்ணும் போது 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 எண்ணிக்கையில் அமைந்தால் உத்தமம் மிக சிறப்பு தரும்.

தினப் பொருத்தம் பார்க்கும் முறை மூன்று

பெண் நட்சத்திரம் தொடங்கி முதல் ஒன்பது நட்சத்திரங்கள் 1 முதல் 9 வரையுள்ள நட்சத்திரங்கள் முதல் பார்யாயம் எனப்படும்.

பார்யாயம் – 1 (1 முதல் 9 வரையுள்ள நட்சத்திரங்கள்)

ரோகிணி

மிருகசீரிஷம்

திருவாதிரை

புனர்பூசம்

பூசம்

ஆயில்யம்

மகம்

பூரம்

உத்திரம்

பார்யாயம் – 2 (10 முதல் 18 வரையுள்ள நட்சத்திரங்கள்)

அஸ்தம்

சித்திரை

சுவாதி

விசாகம்

அனுசம்

கேட்டை

மூலம்

பூராடம்

உத்திராடம்

பார்யாயம் – 3 (19 முதல் 27 வரையுள்ள நட்சத்திரங்கள்)

திருவோணம்

அவிட்டம்

சதயம்

பூரட்டாதி

உத்திரட்டாதி

ரேவதி

அஸ்வினி

பரணி

கார்த்திகை

மேற்காணும் மூன்று பார்யாயங்களில் பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரமானது,

  • 2, 4, 6, 8 என்றால் பொருத்தமுண்டு
  • 3, 5, 7 என்றால் பொருத்தமில்லை

மேற்கண்ட இந்த நட்சத்திரங்கள் தாராபலன் முறையில் 2 – சம்பத், 4 – க்ஷேமம், 6 – சாதகம், 8 – மைத்ரம்.

பரம மைத்ரம். நட்சத்திரங்களாக வருவது.

இதனை தெளிவாக புரிந்து கொள்வதற்கு,

உதாரணமாக பெண் நட்சத்திரமாக ரோகிணியை எடுத்துக் கொள்ளலாம்.

முதல் பார்யாயத்தில் ஆண் நட்சத்திரம் 2 – மிருகசீரிஷம், 4 – புனர்பூசம், 6 – ஆயில்யம், 8 – பூரம் தாராபலனாக இருப்பின் தினப் பொருத்தமுண்டு.

முதல் பார்யாயத்தில் ஆண் நட்சத்திரம் 3 – திருவாதிரை, 5 – பூசம், 7 – மகம் அமையுமானால் பொருத்தமில்லை.

இரண்டாம் பார்யாயத்தில் ஆண் நட்சத்திரம் 3 – சுவாதி, 5 – அனுசம், 7 – மூலம் அமையுமானால் பொருத்தமில்லை.

ஆண் நட்சத்திரம் மூன்றாம் நட்சத்திரம் முதல் பாதமானாலும், ஐந்தாம் நட்சத்திரம் நான்காம் பாதமானாலும், ஏழாம் நட்சத்திரம் மூன்றாம் பாதமானாலும் தினப் பொருத்தம் இல்லை.

மூன்றாம் பார்யாயத்தில் முதல் இரண்டு பார்யாயங்களில் உள்ள 18 நட்சத்திரங்களுக்குள் ஆண் நட்சத்திரம் வரவில்லை என்றால் மூன்றாம் பார்யாயத்திலுள்ள ஒன்பது நட்சத்திரங்களுக்குள் ஆண் நட்சத்திரம் எதுவானாலும் (3, 5, 7 ஆனாலும்) பொருத்தமுண்டு.

ஆனால் ஆண் நட்சத்திரம் 27வது நட்சத்திரமாகி வேறு ராசியில் இருந்தால் பொருந்தாது.

உதாரணமாக பெண் நட்சத்திரம் அஸ்வினி ஆண் நட்சத்திரம் ரேவதி 27வது நட்சத்திரம் ஆகிறது.

அஸ்வினி மேஷ ராசி, ரேவதி மீன ராசி ராசி மாறுவதால் பொருத்தமில்லை.

முதல் பார்யாயத்தில் 3, 5, 7ஆம் ஆண் நட்சத்திரங்கள் தீயவை, இரண்டு மற்றும் மூன்றாம் பார்யாயங்களில் எட்டாம் நட்சத்திரம் மத்திமம் மற்றும் 4, 6, 9ஆம் நட்சத்திரங்கள் உத்தமம்.

ஏக நட்சத்திர பொருத்தம்

ஆண் பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக அமைந்தால் அவற்றில் ரோகிணி, அஸ்தம், திருவோணம், மகம், விசாகம், உத்திராடம், திருவாதிரை, ரேவதி ஆகிய எட்டு நட்சத்திரங்களும் பொருத்தம் உள்ளவை. மற்ற 19 நட்சத்திரங்களும் சாதாரண பொருத்தம் உள்ளவை.

வேறு சில கருத்துக்களில் பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, பொருத்தம் உள்ளவை. மற்றவை பொருந்தாது.

மேற்காணும் ஏக நட்சத்திரங்களில் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், திருவோணம் ஆறு நட்சத்திரங்களும் உத்தமம்.

ஏழு பொருத்தங்கள் அமைந்துள்ளது மற்றும் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், உத்திராடம். இந்த எட்டு நட்சத்திரங்களும் எட்டு பொருத்தங்களாக மத்திமமாக அமைந்துள்ளது, மற்றவை பொருந்தாது.

ஒரே ராசி ஒரே நட்சத்திரம்

மேலும் ஆண் பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக ஒரே ராசியாக இருக்கும் பட்சத்தில் ஆணின் நட்சத்திரம் முதல் பாதமாகவும் பெண்ணின் நட்சத்திரம் அதற்கடுத்த பாதங்களில் அமையவேண்டும்.

ஒரே நட்சத்திரத்தில் ராசி வெவ்வேறாக இருந்தால் ஆண் ஜாதகத்து ராசியை தொடர்ந்து பெண் ஜாதகத்து ராசி அமையவேண்டும்.

அவற்றிலும் விதிவிலக்கு உள்ளது ராசி மாறியிருந்தால் இரண்டு ராசிகளில் பரவி நிற்கும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பெண் ராசி முன்னதாக இருக்கவேண்டும்.

உதாரணமாக இருவரும் உத்திராடம் நட்சத்திரமாக அமைந்தால் முதல் பாதம் தனுசு ராயிலும், பிற மூன்று பாதங்கள் மகர ராசியிலும் அமையும்.

எனவே பெண் மகர ராசியில் பிறந்திருந்தால் மட்டுமே தினப் பொருத்தம் உள்ளதாக அமையும்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் போன்ற கிரகயுத்த செவ்வாயின் நட்சத்திரங்களானால் மட்டும் ஆணின் ராசி முன்னதாக இருக்கலாம் தீங்கில்லை.

இருவருக்கும் ஒரே பாதம் இருக்கக்கூடாது. ஆணின் நட்சத்திர பாதமே முன்னதாக இருக்கவேண்டும் எனும்போது இதிலும் விதிவிலக்காக சதயம், அஸ்தம், சுவாதி, அஸ்வினி, கார்த்திகை, பூரட்டாதி, மிருகசீரிஷம்,
மகம் ஆகிய நட்சத்திரங்களில் இருவருக்கும் முதல் பாதமானால் தீங்கில்லை.

ஆனாலும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம், ஒரே பாதம், தசா புத்தியின் அடிப்படையில் நலம் தருவதில்லை.

பெண் நட்சத்திரத்திற்கு 27ஆம் நட்சத்திரமாக ஆண் நட்சத்திரம் அமைந்து, இருவர் ராசியும் வெவ்வேறானதாக இருக்கக் கூடாது.

மணமகன் நட்சத்திரத்திலிருந்து மணமகளோட நட்சத்திரம் 27வதாக வந்தால் மணமகளோட நட்சத்திரத்திலிருந்து, மணமகன் நட்சத்திரம் ஏழாவதாக வரும், இது பொருத்தமில்லை அதாவது வதம் – வைனாசிகம்.

வதம் – வைனாசிகம்.

பெண் நட்சத்திரத்திற்கு 7 ஆம் நட்சத்திரமாக ஆண் நட்சத்திரம் அமைதல் வதம் எனப்படும்.

அதேபோல் 22 ஆம் நட்சத்திரமாக ஆண் நட்சத்திரம் அமைதல் வைனாசிகம் எனப்படும்.

இதனை தவிர்க்க வேண்டும், ஆனாலும் இதிலும் விதிவிலக்காக காஷ்யப மகரிஷி ஒரு சில நட்சத்திரங்களை அங்கீகரிக்கின்றார். மேலும் இந்த அமைப்பு குல விருத்தியை தருமென கூறுகிறார்.

பெண்

அஸ்வினி

ரோகிணி

திருவாதிரை

புனர்பூசம்

பூசம்

பூரம்

சுவாதி

பூரட்டாதி

ஆண்

புனர்பூசம்

மகம்

உத்திரம்

அஸ்தம்

சித்திரை

அனுஷம்

உத்திராடம்

ரோகிணி

வதம் – வைனாசிகத்திற்கு விதிவிலக்காக மேற்கண்ட நட்சத்திரங்களை இணைக்கலாம்.

மேற்கண்ட நட்சத்திர குறிப்புகள் தினப் பொருத்தம் பார்ப்பதற்கு மட்டுமே.

ஆண் பெண் இருவரும் ரோகிணி, திருவாதிரை, மகம், அஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி இந்த நட்சத்திரங்களில் பிறந்திருப்பது முதல் தர சிறப்புடையது.

அஸ்வினி, கார்த்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் இந்த நட்சத்திரங்களில் பிறந்திருப்பது இரண்டாம் தர சிறப்புடையது.

மேற்கூறிய முதல்தர மற்றும் இரண்டாம் தரமுடைய நட்சத்திரங்கள் அல்லாத பிற நட்சத்திரங்களில் பிறந்த ஆண் பெண்ணை சேர்க்க கூடாது.

தினப் பொருத்தம் பலன்களானது தம்பதிகளின் ஆரோக்கியம் அன்யோன்யம் நீண்ட ஆயுள் வளமான வாழ்வு அமைப்பை அறியலாம்.

0Shares

கட்டுரை ஆசிரியர்: திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றுதலால், ஜோதிடம் பயின்று இன்று பலருக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறார். மேலும் நமது வளைத்ததின் ஜோதிட ஆசிரியராகவும் உள்ளார்.
இவரின் முகநூல் பக்கம் பார்க்க.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: தினப் பொருத்தம் பார்க்கும் முறை | திருமணமும் பொருத்தமும்

Leave a Reply



Your email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares