பஞ்சாங்க அடிப்படை | ஜோதிட சாஸ்திரம் பாகம் 3

பதிவேற்றம் செய்த நாள் February 6, 2023   |   ஆசிரியர் திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை   |   0 கருத்துக்கள்

பஞ்சாங்கம் என்பது வடமொழிச் சொல் ஆகும்.

 • பஞ்ச என்றால் ஐந்து.
 • அங்கம் என்றால் பகுதி் (அ) உறுப்புகள்.

ஐந்து+ உறுப்புகள் என்பதே பஞ்ச அங்கங்கள் என பொருள்.

காலச்சக்கரம் எனும் இராசி மண்டலம் என்பது 360 பாகைகள் கொண்டதாகும். அதில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரன் நிலையைக் கொண்டு கணிக்கப்படுவது பஞ்சாங்கம் ஆகும்.

 1. சூரியன் நிலையால் கிழமையும், சந்திரன் நிலையால் நட்சத்திரமும் கணிக்கப்படும்.
 2. சந்திரன் நிலையிலிருந்து சூரியன் நிலையை கழிக்க கிடைப்பது திதி ஆகும்.
 3. திதியின் அரை பகுதி கரணம் ஆகும்.
 4. சந்திரன் மற்றும் சூரியன் நிலைகளை கூட்ட கிடைப்பது நித்திய நாம யோகம் ஆகும்.

இந்தியாவில் 1957- ஆம் ஆண்டு நாட்காட்டிகள் சீரமைக்கப்பட்டு, இந்திய தேசிய நாட்காட்டி உருவானது.

பஞ்சாங்க அடிப்படை

லீப் வருடங்கள், இந்திய பண்டிகைகள் தொடர்பான விவரங்கள்:

இந்திய ஆண்டுகளின் தொடக்கமான சக ஆண்டுக்கும் நடைமுறை ஆங்கில ஆண்டுகளுக்கும் தொடர்பு உள்ள இந்திய மாதங்களுக்கும் ஒருங்கிணைப்பு போன்றவை ஏற்படுத்தப்பட்டன.

அன்றாட வாழ்வில் ஆங்கில முறை நாட்காட்டியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பண்டிகைகள் திருவிழாக்கள் அந்தந்தப் பிரதேசத்தில் உள்ள பஞ்சாங்கங்கள் உதவியுடன் கொண்டாடப்படுகிறது.

வாரம்

கிழமை, நாள், வாரம், இந்த மூன்றும் ஒரே பொருள்தான். இந்திய பஞ்சாங்கம் முறைப்படி சூரிய உதயம் மறுநாள் சூரிய உதயம் வரையிலானது ஒரு நாள் ஆகும். அதாவது தோராயமாக காலை 6:00 மணி முதல் மறுநாள் காலை கடிகார மணி 6:00 வரையில் ஒரு நாள் ஆகும்.

ஆனால் ஆங்கில தேதி கணக்கீட்டின்படி நடு இரவு 12:00 கடிகார மணி முதல் மறுபடியும் இரவு 12:00 மணி வரை ஒரு நாளாகும். ஒரு நாளின் இரவு 12:00 மணிக்கே ஆங்கில முறைப்படி தேதியும், கிழமையும் மாறி விடும்.

ஒரு நாளின் இரவு 12:00 மணியை 0:00 மணி என்று தொடங்கி மறுதினம் இரவு 12:00 மணி வரை 24:00 மணி என்ற கணக்கில் இரயில்வே மணி செயல்படுத்தப்படுகிறது. இதில்முக்கியமாக நம் ஜோதிட கணக்கீடுகள் தமிழ் முறைப்படி காலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை, 60 நாழிகை என்ற அடிப்படையில்தான் கணக்கிடப்படுகிறது.

அதன்படி

 • பஞ்சாங்க பெயர் – தமிழ்ப்பெயர்
 • ஸோம வாரம். – திங்கள்
 • மங்கள வாரம். – செவ்வாய்
 • புத வாரம். – புதன்
 • குரு வாரம். – வியாழன்
 • சுக்ர வாரம். – வெள்ளி
 • சனி வாரம். – சனி
 • ரவி வாரம். – ஞாயிறு

மேற்காணும் வாரம் என்பது நிழல் கிரகங்களான ராகு – கேது தவிர பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி எனும் ஏழு கிரகங்களின் பெயர்களில் உள்ளது.

மேலும் யுரேனஸ்,நெப்ட்டியூன் போன்ற மேலும் கண்டுபிடிக்கப்படாத இதர கிரகங்கள் வானத்தில் சஞ்சாரம் செய்தாலும், அவை பூமியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாததால் அதன் பெயரில் வாரங்கள் கிடையாது, ஹோரைகளும் கிடையாது.

ஒரு நாள் சூரிய உதய நேரத்தில் எந்த ஹோரை தொடங்குகிறோம், அந்த கிரகத்தின் பெயரை அந்த நாளுக்கு வாரப்பெயர்களாக வைத்தார்கள்.

ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தில் பூமியின் மீது குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிக்கம் அல்லது தாக்கம் ஏற்படுகிறது.

அந்த தாக்கம் 2 1/2 நாழிகை அதாவது 1 மணி நேரம் ஏற்படுகிறது. பிறகு அடுத்து 2 1/2 நாழிகை வேறு கிரகத்தின் தாக்கம் ஏற்படுகிறது.

அதைத்தான் அக்கிரகத்தின் ஹோரைகள் என்று கூறுகிறோம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயம் முதல்2 1/2 நாழிகை சூரியனின் தாக்கமும், திங்கட்கிழமை சூரிய உதயம் முதல் 2 1/2 நாழிகை சந்திரனின் தாக்கமுமாக முறையே தொடர்ந்து செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என்றவாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகங்களின் தாக்கமுமாக ஏற்படுகிறது. இதன் அடிப்படையில் தான் வாரத்தின் பெயர்களாக வைத்தார்கள்.

கிழமைகளில் பிறந்தவர் குணநலன்கள் :

ஞாயிறு பிறந்தவர்: அதிக பேச்சு.தைரியம், பயணங்களில் ஆர்வம் உள்ளவர்.

திங்கள் பிறந்தவர்: மென்மையானவர், அமைதியானவர், உண்மையை விரும்புவர், நல்ல தோற்றமுள்ளவர்.

செவ்வாய் பிறந்தவர்: கோபம், தைரியம், காரிய ஆற்றல், பெண்களிடம் ஆதரவு தேடுபவர்.

புதன் பிறந்தவர்: நல்ல இனிமையான தோற்றம், உயர்ந்த மதிநுட்பம் உள்ளவர்.

வியாழன் பிறந்தவர்: இரக்க குணம், நடைமுறைவாதி, நேரத்தை முறையாக பயன்படுத்துபவர்.

வெள்ளி பிறந்தவர்: நடைமுறைவாதி, வெள்ளை நிற உடைகளை விரும்புவர்.

சனியில் பிறந்தவர்: பொதுவாகவே ஏழ்மையானவர்கள், மெலிந்த உடல், மற்றவர்களிடம் புகழத் தெரியாத குணம், உணர்ச்சிவசப்படுபவர்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாதவர்கள்.

இவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள்

ஞாயிறு – சூரியன்.

திங்கள் – வளர்பிறையில் பிறந்தவர் அம்பிகை, தேய்பிறையில் பிறந்தவர் துர்க்கை மற்றும் சிவன்.

செவ்வாய் – சுப்ரமணியர் அல்லது சக்கரத்தாழ்வார் மற்றும் பூமாதேவி விநாயகர், பார்வதி.

புதன் – விஷ்ணு.

வியாழன் – குரு, பிரம்மா, கிருஷ்ணர், தஷிணாமூர்த்தி.

வெள்ளி – லட்சுமி.

சனி – சனீஸ்வரன், வெங்கடேச பெருமாள், ஆஞ்சநேயர்.

சுபகாரியங்கள் செய்வதற்கான நாட்கள்

ஞாயிறு, வளர்பிறை திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகியவைகளாகும்.

தவிர்க்க வேண்டிய நாட்கள்

தேய்பிறையில் வரும் திங்கள், செவ்வாய், சனி ஆகியவைகளாகும்.

மேலும் எந்தெந்த நாட்களில் என்னென்ன காரியங்கள் செய்யலாம் என்று பஞ்சாங்கத்தில் விபரமாக குறிப்பிட்டதை கவனித்து அதனை மேற்கொள்ளலாம்.

0Shares

கட்டுரை ஆசிரியர்: திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றுதலால், ஜோதிடம் பயின்று இன்று பலருக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறார். மேலும் நமது வளைத்ததின் ஜோதிட ஆசிரியராகவும் உள்ளார்.
இவரின் முகநூல் பக்கம் பார்க்க.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: பஞ்சாங்க அடிப்படை | ஜோதிட சாஸ்திரம் பாகம் 3

Leave a ReplyYour email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares