பூமியின் இயக்கமும் நாட்களும் | ஜோதிட சாஸ்திரம் பாகம் 07

பதிவேற்றம் செய்த நாள் October 11, 2023   |   ஆசிரியர் திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

0 கருத்துக்கள்

இந்த பதிவில் பூமியின் சுழல் பாதை, பாகைகளால் கணக்கிடபடும் கால நேரங்கள், அதிலிருந்து கிடைக்கும் புவி சார்ந்த நேரங்களை பற்றி படிப்போம்.

பூமி தன்னைத்தானே ஒருமுறை சுழல்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் 24 மணி நேரம் அல்லது 1440 நிமிடங்கள் ஆகும்.

  • 1 மணி நேரம் = 60 நிமிடங்கள்
  • 24 மணி நேரம் = 24 * 60 = 1440 நிமிடங்கள்.

பூமியின் மொத்த சுற்றளவு 360 டிகிரி அல்லது 360 பாகைகளாகும். இதை சுற்றிவர பூமிக்கு 24 மணி நேரம் ஆகிறது. இதன்படி 1 பாகை அல்லது 1 டிகிரியை கடப்பதற்கு 1440 / 360 என வகுத்து, 4 நிமிடம் ஆகிறது.

உலக அளவில் தீர்க்க ரேகையினைக் கொண்டுதான் ஓர் இடத்தின் இந்திய பொது நேரத்தை (IST) சுதேச மணியாக (LMT) மாற்றி குறிப்பிட்ட இடத்தின் உண்மையான நேரம் கணக்கிடப்படுகிறது.

பூமியின் இயக்கமும் நாட்களும்

இந்திய பொது நேரம் (IST)

இந்தியாவின் மத்திய ஸ்தம்பம் அல்லது ரேகாம்சம் 82º30′ கிழக்கு என்பதாகும். இது உலக மத்திய ஸ்தம்ப இடமான இங்கிலாந்து நாட்டின் க்ரீன்வீச் நகரம் 0º ரேகாம்சம் என ஆரம்பித்து கிழக்கே 82º30̀’ யில் இந்தியா உள்ளது என்றறியப்பட்டுள்ளது.

உலக பொது நேரம் நள்ளிரவு 12 மணியாய் இருக்கும்போது, இந்தியப் பொது நேரம் அதிகாலை 5 மணி 30 நிமிடம் ஆகும். இதை எப்படி கணக்கிடுவது என பார்ப்போம்.

0º பாகை அல்லது டிகிரியிலிருந்து ஒரு பாதையை பூமி கடப்பதற்கு 4 நிமிடம் கணக்கிட்டால் அதன்படி 82º பாகை 30′ கலை (82 டிகிரி 30 மினிட்) ஆகும்.

இதனை 1 பாகைக்கு 4 நிமிடங்கள் வீதம் கணக்கிட்டால் 82*4 = 328 நிமிடங்கள், மற்றும் 30 கலைக்கு 2 நிமிடம் 328+2 = 330 நிமிடங்கள். இதுவே 5 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகிறது.

இப்படி, இங்கிலாந்தில் க்ரீன்வீச் நள்ளிரவு 12 மணியாக இருக்கும்பொது இந்தியாவில் நேரம் அதிகாலை 5 மணி 30 நிமிடங்கள். அதேபோல் க்ரீன்வீச் மதியம் உச்சி பொழுது 12 மணியாக இருக்கும்போது இந்தியாவில் மாலை அந்திப் பொழுது 5 மணி 30 நிமிடமாக இருக்கும்.

பூமி பாகைகளும் நேர கணக்கும்

ஒரு குறிப்பிட்ட நேரம் என்று சொன்னால் அந்த நேரத்தில் சூரியனின் இயக்கத்தை நிறுத்தி பார்க்கிறோம் என்று அர்த்தம்.

பூமியை நான்கு பாகங்களாக பிரித்து பார்த்தால் ஒவ்வொரு பாகமும் 90 பாகை உடையதாக இருக்கும். பூமியின் சுழல்தல் 360 பாகையை குறிப்பதால் மேற்படி 24 மணி நேரத்தையும் 4 பாகமாக்குவோம்.

1 ஆம் பாகத்தின் ஆரம்பம் அதிகாலை 6 மணி என்று வைத்துக்கொண்டால், அதிலிருந்து 90 பாகை தள்ளி உள்ள 2 ஆம் பாகம் இடத்தில் பகல் 12 மணியாக இருக்கும். அதிலிருந்து இன்னும் 90 பாகை தள்ளி உள்ள 3 ஆம் பாகம் இடத்தில் மாலை 6 மணியாக இருக்கும். மேலும் 90 பாகை தள்ளி உள்ள 4 ஆம் பாகத்தின் ஆரம்பம் நள்ளிரவு 12 மணியாக இருக்கும்.

4 ஆம் பாகத்தின் முடிவு 1 ஆம் பாகத்தின் ஆரம்பம் அதிகாலை 6 மணியாக இருக்கும்.

உதாரணம்

இந்தியாவில் இருந்து தோராயமாக 90 பாகை கிழக்கு தீர்க்க ரேகையில் நியுசிலாந்து உள்ளது. இங்கிலாந்தில் இருந்து 90 பாகை கிழக்கு தீர்க்க ரேகையில் இந்தியா உள்ளது.

எனவே இந்தியாவில் காலை 6 மணி என்று இருக்கும்பொழுது

  • நியிசிலாந்தில் நண்பகல் 12 மணி ஆகவும்
  • அமெரிக்கவில் மாலை 6 மணி ஆகவும்
  • இங்கிலாந்தில் நள்ளிரவு 12 மணி எனவும் இருக்கும்

இந்த நேர அளவுகள் தோராயமானவை ஆகும்.

அமெரிக்கவில் மாலை 6 மணி என நம் பார்த்தது, முதல் நாளின் மாலை 6 மணியை குறிக்கும்.

ஒரு உதாரணத்திற்கு, இங்கிலாந்தில் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முடிந்து செவ்வாய் கிழமை ஆரம்பிக்க இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

அந்த சூழ்நிலையில், இந்தியாவில் செவ்வாய் கிழமை காலை 6 மணியாகும்.

நியிசிலாந்தில் செவ்வாய் மதியம் 12 மணியாகும்.

அமெரிக்காவில் திங்கட்கிழமை மாலை 6 மணியாகவும் இருக்கும்.

அதேபோல் நியிசிலாந்திற்கு ஒரு பாகை கிழக்கில் உள்ள நகரில் திங்கட்கிழமை மதியம் 12 மணியாக இருக்கும், ஏனென்றால் கடைசி இரண்டு இடங்களும் இங்கிலாந்திற்கு மேற்கு திசையில் இருக்கின்றன.

நியுசிலாந்திற்கு அருகில் சர்வதேச தேதியின் எல்லைக்கோடு செல்கிறது.

0Shares

கட்டுரை ஆசிரியர்: திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றுதலால், ஜோதிடம் பயின்று இன்று பலருக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறார். மேலும் நமது வளைத்ததின் ஜோதிட ஆசிரியராகவும் உள்ளார்.
இவரின் முகநூல் பக்கம் பார்க்க.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: பூமியின் இயக்கமும் நாட்களும் | ஜோதிட சாஸ்திரம் பாகம் 07

Leave a ReplyYour email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares