வீட்டில் பணம் சேர வேண்டுமா

பதிவேற்றம் செய்த நாள் November 27, 2021   |   ஆசிரியர் மயில்ராஜ்

0 கருத்துக்கள்

வீட்டில் பணம் சேர வேண்டுமா, இதோ சில எளிய பரிகாரங்கள், மற்றும் வாஸ்து முறைகள்

துளசி மாடம் அமைத்து தினமும் அதனை பூஜை செய்து வந்தால் தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் பெருகும்.

அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும், 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.

வீட்டில் பணம் சேர

கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் வழிபட்டு வணங்கத் தொழிலில் தடைகள் நீங்கி லாபம் கிட்டும்.

செவ்வாய்கிழமையில் செவ்வரளி மலரைக் கொண்டு முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம் பெருகும்.

குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கற்கண்டு போட்டு தீபம் ஏற்ற லட்சுமி பார்வை செய்வாள்.

ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைல தீபமேற்றி வழிபட பணம் கிடைக்கும்.

சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி தௌpத்திட செல்வம் சேரும்.

இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழ பணம் கிடைக்கும்.

வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் கொழிக்கும்.

சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில் பணம் தொழிலில் வரும்.

ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.

கோவிலில் லட்சுமி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.

பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வந்தடையும்.

ஜோடி கழுதைப் படம், ஓடும் வெள்ளை குதிரை படம், அடிக்கடி பார்க்க பணம் வரும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும். ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும். ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷணமாகும்.

வாஸ்து முறையில் பண சேர சில வழிகள்:

குபோரன்


வாஸ்து என்பது மிகவும் அற்புதமான மற்றும் முக்கியமான ஒரு சாஸ்திரம் ஆகும்.

வாஸ்து சாஸ்திரத்தை சரியான முறையில் பின்பற்றினால் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம்.

நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம்.

பணம் கிடைக்காமல் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை பயன்தரும்.

வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுப்பதன் மூலம் சோம்பேறிகளாகி விடுவீர்கள்.

உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருந்தால் வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும்.

வீட்டில் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது யாருக்கும் தெரியக்கூடாது. இதனால் உங்களுக்கு அதிகப்படியான பணம் வந்து சேரும்.

உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் உணவு வகைகள் தெரிய வேண்டும். இதனால் உங்களுக்கு பணம் அதிகரிக்கும்.

நீங்கள் குடியிருக்கும் வீட்டில் பணமும், சகல ஐஸ்வர்யமும் பெருக செய்ய வோண்டியவைகள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.

0Shares

கட்டுரை ஆசிரியர்: மயில்ராஜ்

Hey, I am Myilraj G, from Tamil-Nadu India. The decision I made on 31-DEC-2015, has entirely changed my life from a novice office going guy into a successful entrepreneur. Blogging was my passion and life becomes enjoyable. Get here to know more about me.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: வீட்டில் பணம் சேர வேண்டுமா

Leave a ReplyYour email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares