கணவன் எப்படி இருத்தல் வேண்டும் | திருமணமும் – பொருத்தமும்!!

பதிவேற்றம் செய்த நாள் August 28, 2022   |   ஆசிரியர் திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

0 கருத்துக்கள்

மனித குல விருத்திக்காக உதவும் திருமணம் எனும் அமைப்பு மனதளவிலும் உடலளவிலும் ஒரு வரமாகவும் சாபமாகவும் உள்ளது.

ஒரு மனிதனின் வாழ்வில் சாதனைகள் புரிய இதுவே காரணமாகவும் உள்ளது. திருமண வயது என்பது ஒரு மனிதன் தன் காலிலே தானே சுயமாக நின்று எதையும் சாதிக்க வல்லமையும் துடிப்பும் உடைய பருவத்தோடு ஒருங்கிணைந்து வருவது.

மழலையாகி பின் சிறுவனாகி, எதிர்கால வாழ்வுக்கு தன்னைக் கல்வி முதலானவற்றில் தயார் செய்து கொண்டு பெற்றோர் பாதுகாப்பில் வளர்ந்து உலக வாழ்வு எனும் சுமையை தன் வலிய மற்றும் இளமையான தோள்களில் தாங்கும் பக்குவத்தை மண வயதில் ஒருவன் அடைகிறான்.

25 வயது முதல் 50 வயது வரை உள்ள பருவமே ஒரு மனிதனின் ஆற்றல் சிறப்பாக வெளிப்படும் காலம்.

தனது முன்னேற்றம், தனது சமுதாயம், தனது தலைமுறை, அடுத்தடுத்த தலைமுறைகள், உலக நலன், இப்படி பல்வேறு இலக்குகளிலும் வேகத்துடனும் விவேகத்துடனும் சோதனையெல்லாம் தாண்டி சாதனை புரியும் காலம் இதுதான்.

இப்போது அவன் அல்லது அவள் இருவருக்குமே தன் கூடவே இருந்து பணியாற்ற ஆலோசனை கூற துணை நிற்க உடற் தேவைகளை பூர்த்தி செய்ய ஒருவரோ அல்லது ஒருத்தியோ எப்போதும் தன் அருகே இருக்க வேண்டும் என ஆவல் வரும் காலமாகிறது.

இம் மணவாழ்வின் வெற்றி தோல்விகளே ஒரு ஆணின் முழு வாழ்வின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கின்றன.

சிறு குடும்பம் சீரான வாழ்வு என்பதே இன்றைய நிலை. எனவே நமது நூல்களில் உள்ள குழந்தை பிறப்பு அவற்றின் எண்ணிக்கை போன்றவை இந்நாளில் ஆய்வுக்குரியது.

எனினும் மனித வம்சம் தொடர ஒரு ஆண்மகனாவது பிறக்கவேண்டும் என்பது நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் யாவிலுமே எதிர்பார்ப்பாகவே உள்ளது.

இல்லறம் நடத்துபவனுக்கு மூன்று விஷயங்கள் நினைவிருக்க வேண்டும்,

  • ஒளி
  • உயர்ந்த வாழ்க்கை
  • அமரத்வம், பொன் ஆகியவைகள்.

பொன்

தங்கத்தின் மஹிமையை எல்லோரும் அறிவார்கள். இல்லறத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இதன் தேவை உணரப்படுகிறது. ஒருவனுடைய தினசரி வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும் இந்த பொன் செல்வத்தையே நம்பி இருக்கிறது.

அமரத்வம்

அமுதம் என்று இங்கு சொல்லப்படுவது மோட்சம், அதுதான் அமரத்வம் வாய்ந்தது.

இந்த உலகமே மரணத்தினால் சூழப்பட்டிருக்கிறது. அந்த மரணத்தின் பிடியிலிருந்து தப்பி அமரத்வம் அடைவதே மனிதனின் லட்சியமாக இருக்க வேண்டும்.

எல்லா தர்மங்களும், செய்யப்பட வேண்டிய கடமைகளும், அதற்காகவே செய்யப்படவேண்டியவை.

இம்மாதிரியான உயர்ந்த வாழ்க்கையை இங்கே வாழவேண்டும். இது நமக்கு ஸ்வர்கத்திற்கு வழிகாட்டியாக அமைகிறது.

ஸ்வர்க்கத்திற்கு, அதாவது உயிருடன் இருக்கும் பொழுதே ஸ்வர்க்கத்திற்கு நிகரான வாழ்க்கை வாழ மூன்று வழிகள் உண்டு.

  • செல்வம்: இங்கு நடத்தப்படும் வாழ்க்கைக்காக
  • உயர்ந்த தரமான வாழ்கையில் சமூகத்தில் உயரிய அந்தஸ்து பெற.
  • அருள் வாழ்க்கை – அவ்வுலகை நாட.

மேலும் இல்லறத்தானின் வீட்டில் உமி, கல் ஆகியவைகள் இல்லாத அரிசி எப்போதும் கைவசம் இருக்க வேண்டும். இதனைப் போன்றே ‘சுத்தம் ‘ குடும்பத்தின் மிகதேவையான ஒரு செயல்.

இம்மாதிரியே கல்வியிலும் நல்லதையே கற்க வேண்டும். அரைகுறை அறிவைத் தரும் கல்வி நூல்கள் கூடாது.

கணவன் செல்லும் வழிகள் இரண்டு

  • அவர் அழிவை அவரே தேடி செல்வது,
  • அவர் முன்னேற்றமடையும் வழி அழிக்கும் வழியை விலக்கி விட்டு முன்னேற்ற வழியை அடைவது.

கணவன் இதனை சரியாக பின்பற்றி உயரவேண்டும். பக்குவம் அடைந்தவன் வாழ்க்கையைச் செம்மையாக நடத்துகிறான். வீட்டில் உள்ள எல்லோருக்கும் வழக்கமாக செய்யப்படும் ஸம்ஸ்காரங்களின் அறிவு இருக்கவேண்டும். அதாவது,

  • பண்டிகை நாட்களை கொண்டாடுவது எப்படி,
  • இறந்தவர்களுக்கு கர்மாக்களை செய்வது எப்படி,
  • யாகத்தை எப்படி செய்வது,
  • விருந்தினர்களை எப்படி உபசரிப்பது,

போன்றவை.

புனிதமான செயல்களையே செய்து முன்னேற வேண்டும். நல்ல செயல்களே மனிதனுக்கு வழிகாட்டியாகும். கணவன் ஒருபோதும் அதனை விட்டு நீங்ககூடாது.

தேவர்கள் அவன் வீட்டை நாடிவரும் பாதையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த வழிதான் கணவனும் போக ஏற்றவழி. ஸ்வர்கத்தில் இப்போது இருக்கும் தேவர்கள் இப்படி சென்றவர்கள் தான்.

ஆகவே இல்லறத்தானும் நல்லறம் சென்று ஸ்வர்க்கத்தை அடையவேண்டும்.

0Shares

கட்டுரை ஆசிரியர்: திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றுதலால், ஜோதிடம் பயின்று இன்று பலருக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறார். மேலும் நமது வளைத்ததின் ஜோதிட ஆசிரியராகவும் உள்ளார்.
இவரின் முகநூல் பக்கம் பார்க்க.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: கணவன் எப்படி இருத்தல் வேண்டும் | திருமணமும் – பொருத்தமும்!!

Leave a Reply



Your email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares