நாள் என்றால் என்ன | ஜோதிட சாஸ்திரம் பாகம் 06

பதிவேற்றம் செய்த நாள் October 11, 2023   |   ஆசிரியர் திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

0 கருத்துக்கள்

ஒரு நாள் என்றால் – என்ன நாள் தான்.

இதில் கூறுவதற்கு வேறு ஒரு அர்த்தமும் இல்லை என்று ஒரு ஜோதிட பெருந்தகை கமெண்ட் கூறுகிறார். அவர் கூற்று உண்மைதான் இருந்தாலும் கிரக அடிப்படையில் தான் நாள் உருவாகிறது என்பதால் அவருக்கான பதிவாக இது அமையட்டும்.

ஒரு கிரகம் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்ள ஆகும் காலமே ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் ஒரு இரவு மற்றும் ஒரு பகல் என இரண்டு பகுதிகள் இருக்கும்.

சூரிய ஒளி பெறும் பகுதி பகலாகவும், சூரிய ஒளி பெறாத பகுதி இரவாகவும் இருக்கும். தோராயமாக, ஒரு கிரகத்தின் சுழற்சி காலத்தில் அரைப் பகுதி பகலாகவும் அரைப் பகுதி இரவாகவும் இருக்கும்.

அந்த வகையில் பூமி ஒருமுறை சுழல 24 மணி நேரம் ஆகின்றது என்றால், 12 மணி நேரம் பகலாகவும் மற்றும் அடுத்த 12 மணி நேரம் இரவாகவும் இருக்கும்.

இதேபோல் சந்திரன் உட்பட மற்ற கிரகங்களுக்கும் ஒரு நாள் என்பது,

நாள் என்றால் என்ன

பூமியின் நாட்களில் எத்தனை என்றும் மற்றும் மணி என்றால் பூமியில் நாம் கடைப்பிடிக்கும் மணியில் எத்தனை மணி நேரத்தைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது.

கிரகம்

சந்திரன்

புதன்

சுக்கிரன்

செவ்வாய்

குரு

சனி

நாள்

27.32

59.00

243.00

25.00

10.00

10.20

பகல்

13.65

29.50

121.50

12.30

5.00

5.10

இரவு

13.65

29.50

121.50

12.30

5.00

5.10

மேற்காணும் உதாரணமாக புதன் கிரகத்தை எடுத்து கொள்வோம்.

ஒரு முறை சுழல 59 நாட்கள் ஆகிறது, எனவே ஒருநாள் என்பது புதனை பொறுத்தவரை பூமியின் 59 நாட்களைக் கொண்டது. இதில் தோராயமாக 30 நாட்கள் தொடர்ந்து பகல் பொழுதாக இருக்கும்.

மேலும் புதன் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அந்த பகல் பொழுதான,

  • 30 நாட்களும் கடும் வெப்பநிலையை உடையதாகவும் அடுத்து வரும்,
  • 30 நாட்களும் தொடர்ந்து இரவுப் பொழுதாகவும் கடுங் குளிராகவும் இருக்கும்.

அதே போல்சனிக்கிரகத்தை எடுத்துக் கொள்வோம்.

5 மணி நேரம் பகல் மற்றும் அடுத்த 5 மணி நேரம் இரவு என இருக்கும். எனவே தட்பவெப்பநிலை குறைந்த நேரத்தில் மாற்றம் அடையும் சனியில் மனித இனம் இருந்தால் அவர்கள் வாழ்க்கை அமைப்பு எவ்வளவு சிக்கலும் குழப்பம் நிறைந்ததாகவும் இருக்கும்.

மேலும் பல்வேறு விதமான நேர அளவீடுகள் பற்றி பார்போம்.

விண்வெளி நேரம்: முதல் நாள் சூரிய உச்சி வேளையிலிருந்து மறுநாள் சூரிய உச்சி வேளை வரை.

இரயில்வே நேரம்: முதல் நாள் நள்ளிரவு முதல் மறுநாள் நள்ளிரவு வரை.

சூரிய நேரம்: இதனை சூரிய கடிகார நேரம் என்றும் கூறுவர். சூரியன் வெளிச்சம் தரும்போது விழும் ஒரு கோளின் நிழல் 1, 2, 3…. என 12 வரை மணி நேரங்களில் விழுவதாக அமைக்கப்படுவது சூரிய கடிகாரம்.

சூரியன் பூமத்திய ரேகையில் ஒரே சீரான வேகத்தில் பயணிப்பதாகக் கொண்டு கணிக்கப்படுகிறது.

நட்சத்திர மணி: தினந்தோறும் வான் உச்சியை அடைய சூரியன் எடுத்துக் கொள்ளும் 24 மணி நேரமே சூரிய நாள் ஆகும். பூமி ஒருமுறை சுழல்வதற்கு ஆகும் காலம் 24 மணி நேரம்.

இனி நிலையான நட்சத்திரத்தில் இருந்து பூமியின் சுழற்சியைப் பார்க்கும்பொழுது பூமி ஒருமுறை சுழல 23 மணி 56 நிமிடம் 4 விநாடி ஆகிறது. இதுவே நட்சத்திர நாள் எனப்படும். ஒரு சூரிய நாளை விட ஒரு நட்சத்திர நாள் 3 நிமிடம் 56 விநாடி குறைவானது.

ஏனெனில் ஒரு நட்சத்திர நாள் எனும் 23 மணி 56 நிமிடங்களில் தனது பாதையில் சூரியன் ஒரு பாகை நகர்ந்திருக்கும்.

இந்த ஒரு பாகையை சரி செய்து சூரியனுக்கு நேராக பூமி வருவதற்கு மேலும் 4 நிமிடங்கள் தேவைப்படும்.

ஒரு நட்சத்திர பாகை நாளை 24 நட்சத்திர மணிகளாக பிரிக்கலாம். பூமி ஒருமுறை சுழல ஆகும் காலமே நட்சத்திர நாள் எனப்படும். அவ்வாறு பூமி சுழலும் காலத்தில் அதிலுள்ள நபர் 12 இராசிகளையும் காண இயலும்.

இவையே லக்னம் முதல் 12 வீடுகளாக அமையும்.

  • அந்த நபருக்கு கிழக்கு திசையில் உள்ள இராசி 1 ஆம் வீடாகும்
  • பாதத்திற்கு கீழுள்ள இராசி 4 ஆம் வீடாகும்
  • மேற்கு திசையிலுள்ள இராசி 7 ஆம் வீடாகவும்
  • தலைக்கு உச்சியிலுள்ள இராசி 10 ஆம் வீடாகவும் அமையும்.

ஜோதிட அடிப்படையில் காலக் கணக்கீடுகள்

நட்சத்திர நாள் ஒன்று: இரு நாட்களில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் நம் தலைக்கு நேர் மேலே தோன்ற ஆகும் காலம் 23 மணி 30 நிமிடம் உள்ள காலம்.

நாள்: 24 மணி நேரம் கொண்ட காலம்.

சாந்திரமான மாதம்: இரு அமாவாசைகளுக்கு இடைப்பட்ட காலம்.

செளரமான மாதம்: சூரியன் ஒரு ராசியிலிருந்து மறுராசிக்கு பிரவேசிக்க ஆகும் காலம் 30 நாள்.

செளரமான வருடம்: சூரியன் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர ஆகும் காலம் 365.25 நாட்கள்.

குரு வருடம் (பிர்ஹஸ்பத்ய வருடம்): குரு ஒரு ராசியிலிருந்து மறுராசிக்கு பிரவேசிக்க ஆகும் காலம்.

இராசி மண்டலத்தின்கணித அளவீடுகள்

60 பரதத்பரா – 1 தத்பரா

60 தத்பரா – 1 விலிப்தம்(விகலை அல்லது விநாடி)

60 விலிப்தம் – 1 லிப்தம்(கலை அல்லது நிமிடம்)

60 லிப்தம் – 1 லவம்(1 பாகை. பாகம். அம்சம்)

30 – லவம் ( பாகை) – 1 இராசி

12 இராசி – இராசி மண்டலம்

0Shares

கட்டுரை ஆசிரியர்: திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றுதலால், ஜோதிடம் பயின்று இன்று பலருக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறார். மேலும் நமது வளைத்ததின் ஜோதிட ஆசிரியராகவும் உள்ளார்.
இவரின் முகநூல் பக்கம் பார்க்க.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: நாள் என்றால் என்ன | ஜோதிட சாஸ்திரம் பாகம் 06

Leave a Reply



Your email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares