நட்சத்திரப் பலன் அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு

பதிவேற்றம் செய்த நாள் November 27, 2021   |   ஆசிரியர் மயில்ராஜ்

0 கருத்துக்கள்

மனிதர்கள் தங்கள் வாழ்வில் சிறப்படைய அவரவர் நட்சத்திரப் பலன்  நாளில் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்களை வழிபட நல்வழி பிறக்கும்.

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப் பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள்.

அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திர நாளிலோ அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்களை வழிபாட்டால் வாழ்வில் சிறப்படையலாம். குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.

நட்சத்திரப்-பலன்

நட்சத்திரங்கள் மற்றும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் :

அஸ்வினி – ஸ்ரீசரஸ்வதி தேவி.

பரணி – ஸ்ரீதுர்கா தேவி.

கார்த்திகை – ஸ்ரீசரஹணபவன் (முருகப் பெருமான்).

ரோகிணி – ஸ்ரீகிருஷ்ணன் (விஷ்ணு பெருமான்).

மிருகசீரிடம் – ஸ்ரீசந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்).

திருவாதிரை – ஸ்ரீசிவபெருமான்.

புனர்பூசம் – ஸ்ரீராமர் (விஸ்ணு பெருமான்).

பூசம் – ஸ்ரீதட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்).

ஆயில்யம் – ஸ்ரீஆதிசேசன் (நாகம்மாள்).

மகம் – ஸ்ரீசூரிய பகவான் (சூரிய நாராயணர்).

பூரம் – ஸ்ரீஆண்டாள் தேவி.

உத்திரம் – ஸ்ரீமகாலட்சுமி தேவி.

அஸ்தம் – ஸ்ரீகாயத்ரி தேவி.

சித்திரை – ஸ்ரீசக்கரத்தாழ்வார்.

சுவாதி – ஸ்ரீநரசிம்மமூர்த்தி.

விசாகம் – ஸ்ரீமுருகப் பெருமான்.

அனுசம் – ஸ்ரீலட்சுமி நாரயணர்.

கேட்டை – ஸ்ரீவராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்).

மூலம் – ஸ்ரீஆஞ்சநேயர்.

பூராடம் – ஸ்ரீஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்).

உத்திராடம் – ஸ்ரீவிநாயகப் பெருமான்.

திருவோணம் – ஸ்ரீஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்).

அவிட்டம் – ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்).

சதயம் – ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்).

பூரட்டாதி – ஸ்ரீஏகபாதர் (சிவபெருமான்).

உத்திரட்டாதி – ஸ்ரீமகாஈஸ்வரர் (சிவபெருமான்).

ரேவதி – ஸ்ரீஅரங்கநாதன்.

இவைகள் அனைத்தும் அந்தந்த நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள் ஆகும். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.

இதனைத் தவிர அவரவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகம் எதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வந்தால் வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

நட்சத்திரங்களின் கிரகங்கள் மற்றும் தெய்வங்கள் :

நட்சத்திரங்களின் கிரகங்கள் மற்றும் தெய்வங்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம்சூரியன்சிவன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம்சந்திரன்சக்தி
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்செவ்வாய்முருகன்
திருவாதிரை, சுவாதி, சதயம்ராகுகாளி, துர்க்கை
புனர்பூசம், விசாகம், பூரட்டாதிகுருதட்சிணாமூர்த்தி
பூசம், அனுசம், உத்திரட்டாதிசனிசாஸ்தா
ஆயில்யம், கேட்டை, ரேவதிபுதன்விஷ்ணு
மகம், மூலம், அஸ்வினிகேதுவிநாயகர்
பரணி, பூரம், பூராடம்சுக்கிரன்மகாலஷ்மி

நட்சத்திரத்திற்கேற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்:

கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

சூரியனே உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். சிவபெருமானைத் தொடர்ந்து வழிபடுவதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். பிரதோஷ நாளில் சிவாலய தரிசனம் செய்வது சிறப்பு.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நிறம்: 1,5,7

அதிர்ஷ்ட கல்:  மாணிக்கம்


ரோகிணி, அஸ்தம், திருவோணம்

சந்திரனே உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். அம்பிகையை வழிபடுவதால் நன்மை பெறுவீர்கள். பவுர்ணமியில் அம்மனுக்கு தீபமேற்றி வழிபட யோகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட நிறம்: 2,3,9

அதிர்ஷ்ட கல்:  முத்து


மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

செவ்வாய்னே உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது சிறப்பு.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட நிறம்: 3,6,9

அதிர்ஷ்ட கல்:  பவளம்


திருவாதிரை, சுவாதி, சதயம்

ராகுவே உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். ராகுவேளையில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது நன்மைதரும்.

அதிர்ஷ்ட நிறம்: கருமை

அதிர்ஷ்ட நிறம்: 1,4,7

அதிர்ஷ்ட கல்:  கோமேதகம்

* கோமேதகத்தை மோதிரத்தில் பதித்தும், டாலராக அணிந்து கொள்ளலாம்.


புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

குருவே உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். தட்சிணாமூர்த்திக்கு வியாழனன்று நெய்தீபம் ஏற்றி, கொண்டல்கடலை மாலை சாத்தி, வழிபட்டு வந்தால் சுபபலன் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட நிறம்: 2,3,9

அதிர்ஷ்ட கல்:  புஷ்பராகம்


பூசம், அனுஷம், உத்திரட்டாதி

சனி உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். நீங்கள் வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் சாஸ்தா. காலையில் எழுந்ததும் இவரை தரிசிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடும் உங்களுக்கும்  அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இயன்ற போதெல்லாம் சாஸ்தா கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட நிறம்: 5,6,8

அதிர்ஷ்ட கல்:  நீலம்


ஆயில்யம், கேட்டை, ரேவதி

புதன் உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். உங்களுக்கு அதிர்ஷ்டம் அருள்பவர் மகாவிஷ்ணு. சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது யோகம் தரும். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் சிறப்பு. அதிர்ஷ்டநிறம் பச்சை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட நிறம்: 1,5,8

அதிர்ஷ்ட கல்:  மரகதம் என்னும் பச்சைக்கல்


அசுவினி, மகம், மூலம்

நட்சத்திர அதிபதி கேது ஆவார். அதிர்ஷ்ட தெய்வம் விநாயகர். எப்போதும் விநாயகரை வழிபட்ட பின் பணிகளைத் துவக்குங்கள். சதுர்த்திநாளில் விநாயகர் கோயிலுக்குச் செல்ல மறக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு (அ) சிவப்பு கலந்த பல நிறம்

அதிர்ஷ்ட நிறம்: 5,7,9

அதிர்ஷ்ட கல்:  வைடூர்யம்


பரணி, பூரம், பூராடம்

சுக்ரனே உங்களின் நட்சத்திர அதிபதி. அதிர்ஷ்ட தெய்வம் மகாலட்சுமி. காலையில் கண் விழிக்கும் போதே மகாலட்சுமி படத்தை பார்த்து வணங்குங்கள். வெள்ளிக்கிழமையில் லட்சுமி சந்நிதியில் நெய்தீபமிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட நிறம்: 3,6,8

அதிர்ஷ்ட கல்:  வைரம்

எல்லோராலும் வாங்கமுடியாது. வைரத்திற்குப் பதிலாக, ஸ்படிக மாலை வாங்கி அணிவதும் நல்லது.

நட்சத்திரத்திர்க்குரிய ஆலயங்கள்

அசுபதி : சனீஸ்வரர் [திருநள்ளாறு, காரைக்கால், பாண்டிச்சேரி]

பரணி : மகாகாளி [திருவாலங்காடு, அரக்கோணம் அருகில் வேலூர் மாவட்டம்]

கிருத்திகை : ஆதிசேடன் [நாகநாதர் கோவில், நாகை மாவட்டம்]

ரோகிணி : நாகநாதசுவாமி [திருநாகேஸ்வரம், தஞ்சை மாவட்டம்]

மிருகசீரிஷம் : வனதூர்கா தேவி [கதிராமங்கலம், குடந்தை அருகில் நாகை மாவட்டம்]

திருவாதிரை : சனீஸ்வரர் [திருகொள்ளிக்காடு, திருவாரூர் மாவட்டம்]

புனர்பூசம் : குருபகவான் [ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம்]

பூசம் : சனீஸ்வரர், குச்சனுர் [தேனி அருகில், மதுரை மாவட்டம்]

ஆயில்பம் : சனீஸ்வரர் [திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்]

மகம் : தில்லைக்காளி [சிதம்பரம், கடலூர் மாவட்டம்]

பூரம் : உத்வாசநாதர் [திருமணஞ்சேரி, குடந்தை வழ மாயவரம், நாகை மாவட்டம்]

உத்திரம் : வாஞ்சியம்மன் [மூலனூர், ஈரோடு மாவட்டம்]

அஸ்தம் : ராஜதுர்கை [திருவாரூர்  மாவட்டம்]

சித்திரை : ராஜதுர்க்கை [திருவாரூர் மாவட்டம்]

சுவாதி : சனீஸ்வரர் [திருவானைக்கால், திருச்சி மாவட்டம்]

விசாகம் : சனீஸ்வரர் [சோழவந்தான், மதுரை மாவட்டம்]

அனுஷம் : மூகாம்பிகை [திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம்]

கேட்டை : அங்காள பரமேஸ்வரி [பல்லடம், கோவை மாவட்டம்]

மூலம் : குரு பகவான் [மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மதுரை மாவட்டம்]

பூராடம் : குருபகவான் [திருநாலூர் (பண்ருட்டி அருகில்), கடலூர் மாவட்டம்]

உத்திராடம் : தட்சிணாமூர்த்தி [தருமபுரம்(திருநள்ளாரிலிருந்து 2 கி.மீ), காரைக்கால் மாவட்டம்]

திருவோணம் : ராஜகாளியம்மன் [தெட்டுப்பட்டி,திண்டுக்கல் மாவட்டம்]

அவிட்டம் : சனீஸ்வரன் [கொடுமுடி, ஈரோடு மாவட்டம்]

சதயம் : சனீஸ்வரன் மலைக்கோயில் [திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்]

பூரட்டாதி :ஆதிசேஷன் [காஞ்சிபுரம் மாவட்டம்]

உத்திரட்டாதி : தெட்சிணாமூர்த்தி [திருவையாறு, அரியலூர் மாவட்டம்]

ரேவதி : சசுனீஸ்வரர் [ஓமாம் புலியுர், காட்டு மன்னார்குடி வழி கடலூர் மாவட்டம்]


திருத்தங்கள் இருப்பின் தயவு கூர்ந்து தெரியபடுதவும்…

0Shares

கட்டுரை ஆசிரியர்: மயில்ராஜ்

Hey, I am Myilraj G, from Tamil-Nadu India. The decision I made on 31-DEC-2015, has entirely changed my life from a novice office going guy into a successful entrepreneur. Blogging was my passion and life becomes enjoyable. Get here to know more about me.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: நட்சத்திரப் பலன் அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு

Leave a ReplyYour email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares